டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் கர்நாடக அரசும் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது. காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழகஅரசு வழக்கு தொடுத்த நிலையில் கர்நாடகா அரசு இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. தற்போது கூட கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதாக கர்நாடக அரசு மனு அளித்துள்ளது. மேகதாது அணை அமைக்க அனுமதி வழங்குவதுதான் காவிரி விவகாரத்தில் நிரந்தரதீர்வுக்கு வழிவகுக்கும் என கர்நாடக அரசு தகவல் தெரிவித்துள்ளது.