டெல்லி: காவிரி விவகாரத்தை அரசியலாக்க கூடாது என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் கர்நாடக தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது; கர்நாடக மக்களின் நலனை காக்க காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் முடிவுக்கு பாஜக ஆதரவு வழங்கும். இரு மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு வேண்டும்; தமிழ்நாடு அரசுடன் கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.