சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மக்களின் உரிமையை காத்திட, காவிரி நீரை விரைந்து பெற்றிட உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி தெரிவித்துள்ளார்.