டெல்லி: காவிரியில் நீர் திறக்க உத்தரவிடக் கோரிய தமிழ்நாடு அரசின் வழக்கு 25-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும். நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்படாத நிலையில் வழக்கு விசாரணை 25-ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.