கர்நாடகா: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86வது கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது. காவிரி உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு இன்று வரை வினாடிக்கு 5,000 கன அடி வீதிம் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கடந்த 4 நாட்களாக காவிரியில் வினாடிக்கு 4,000 கன அடி நீர் மட்டுமே திறந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி திறப்பை குறைத்த கர்நாடகா மீது புகார் அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தற்போது தொடங்கியிருக்கிறது, காணொலி காட்சி மூலம் இந்த கூட்டம் நடைபெற்று கொண்டிருகிறது. காவிரி ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு செயலாளர் ஷர்மா பங்கேற்றிருக்கிறார். அதேபோல் தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு திருச்சி மண்டலா தலைமை பொறியாளர் சுபராமணியன் மற்றும் காவிரி தொழில்நுட்ப குழுவினுடைய தலைவர் சுபராமணியன் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தை பொறுத்தவரையில் தற்போது துவங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து அதிகாரிகள் கலந்து கொல்வதைப்போல கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆகிய மாநிலங்கள் அந்தந்த மாநில தலைநகரங்களில் இருந்து காணொலி காட்சி மூலமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கூட்டம் என்பது மிக முக்கியத்துவம் கருதலாம் ஏனென்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு 15 நாட்கள் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. ஆனால் அன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக அரசை பொறுத்தவரை எங்கள் அணைகளில் போதிய நீர் இல்லாததன் காரணமாக தண்ணீர் வினாடிக்கு 3,000 கன அடிவிதம் மட்டுமே திறந்து விடமுடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.