Wednesday, February 21, 2024
Home » கரூரில் காவிரி, அமராவதி ஆறு ஓடுகிறது 15 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி தீவிரம்

கரூரில் காவிரி, அமராவதி ஆறு ஓடுகிறது 15 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி தீவிரம்

by Lakshmipathi

*சிறு தானிய பயிர்களும் விதைப்பு

*20 நாளில் அதிக மழைக்கு எதிர்பார்ப்பு

கரூர் : கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி 15 ஆயிரம் ஹெக்டே பரப்பளவில் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி ஆறு என இரண்டு ஆறுகள் ஓடுகிறது. இதில், கரூர் வழியாக வரும் அமராவதி ஆறு திருமுக்கூடலூர் வழியாக மாயனூர் நோக்கிச் செல்லும் காவிரி ஆற்றில் அமராவதி ஆறு கலந்து ஒரு மித்த காவிரி ஆறாக மாயனூர் நோக்கிச் செல்கிறது.

கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடிகள் வழக்கமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நெல் ரகங்கள் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்று வந்தாலும் காவிரி ஆறு பயணிக்கும் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி அதிகளவு நடைபெற்று வருகிறது. நெல் சாகுபடிக்கான பணிகளை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி 106 ஹெக்டேரிலும், சம்பா நெல் சாகுபடி 14500 ஹெக்டேர் பரப்பிலும், தாளடி, நவரை போன்ற சாகுபடிகள் என மொத்தம் 15500 ஹெக்டேர் பரப்பில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் சோளம், கம்பு போன்ற சிறுதானியங்கள் 10970 ஹெக்டேர் பரப்பிலும், பயறு வகைகளான துவரை, உளுந்து, பாசிபயறு, கொள்ளு போன்றவை 12600 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பருத்தி 823 ஹெக்டேரிலும், கரும்பு 6340 ஹெக்டேரிலும், நிலக்கடலை 9185 ஹெக்டேரிலும், இஞ்சி 7840 ஹெக்டேரிலும், சூரியகாந்தி 2542 ஹெக்டேரிலும், வாழை3913 ஹெக்டேரிலும், மரவள்ளி 2346 ஹெக்டேரிலும், கோரை 1469 ஹெக்டேரிலும், மிளகாய் வகை ரகங்கள் 300 ஹெக்டேரிலும், முருங்கை 210 ஹெக்டேரிலும் மாவட்டம் முழுதும் பரவலாக விளைவிக்கப்பட்டு வருகிறது.

இந்த அனைத்து வகையான பயிர்களும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த பகுதி விவசாயிகளால் விளைவிக்கப்பட்டு வருகிறது, அந்த வகையில் ஆற்றுப்பாசனம், வானம் பார்த்த பூமி, கிணற்றுப்பாசனம், ஏரி, குளங்கள் மூலம் பாசனம் போன்ற வகைகளில் பாசனம் நடைபெற்று வருகிறது.இதற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படுவது, ஆண்டுதோறும் ஆண்டின் சராசரி மழையை மாவட்டம் முழுமையாக பெற வேண்டும். அந்த வகையில், தற்போதைய நிலையில், இதுநாள் வரை குறைந்த அளவில்தான் மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை சீசன் முடிவடைய 20 நாட்கள் உள்ளதால், அதிகளவு மழைப்பொழிவை பெற வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தாண்டு வழக்கத்தை விட அதிகளவு மழைப்பொழிவு இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், இனி வரும் 20 நாட்களிலாவது கரூர் மாவட்டம் அதிகளவு மழையை பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi