சென்னை: காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் உழவர்கள் பாதிக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை மீண்டும் தொடங்க அன்புமணி வலியுறுத்தியுள்ளார். குறுவை பருவ நெல் அறுவடை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விற்பனை செய்ய முடியாமல் உழவர்கள் தவிப்பதாக அவர் கூறினார்.