பெங்களூரு: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனை அடுத்து கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் 35,694 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விச அதிகமாக பெய்து வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து அணைகள் நிரம்பி வருகிறன. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஒக்கேனக்கல் காவிரி ஆற்றில் சுமார் 70 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் செல்கிறது. இதனை அடுத்து அங்கு சுற்றூலா பயணிகள் பரிசல் படகில் சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
இதனை அடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.85 அடியை எட்டியிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனை அடுத்து கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் 35,694 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.