சென்னை: கோகுல மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம், மாநில தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் சென்னை நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாட்டில் யாதவர்களுக்கு போதிய இடஒதுக்கீடு கிடைக்காமல் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளனர். தமிழக அரசும் உடனே சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.பல்லாயிரம் ஆண்டுகளாக பொதுமக்களின் அன்றாட உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் போன்றவற்றுக்கு உதவி வரும் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அரசும், அரசு அதிகாரிகளும் எந்தவித உதவிகளும் செய்ய முன் வராவிட்டாலும், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும், அபராதமும் விதிக்கப்படுகிறது. அதனால் கால்நடைகளுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.