வாடிகன் சிட்டி: உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் வாடிகனில் காலமானார். அவருடைய மரணத்துக்கு பின்னர் கடந்த 8ம் தேதி பதினான்காம் லியோ புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். கத்தோலிக்க திருச்சபை தலைவராக பதினான்காம் லியோ பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதனால் வாடிகன் நகரமே விழா கோலம் பூண்டிருந்தது.
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ,பெரு அதிபர் டினா பொலுஆர்த்தே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஸ்பெயின் ராணி லெட்டிஸியா, மோனாக்கோ இளவரசி சார்லின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்து, புத்த,முஸ்லிம், ஜோராஸ்ட்ரா, சீக்கிய மதங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதலாவது திருப்பலியில் போப் லியோ பேசுகையில், கத்தோலிக்க திருச்சபை ஒற்றுமையின் அடையாளமாக ஒன்றுபட்ட தேவாலயமாக இருக்க வேண்டும். இதனால் கத்தோலிக்க திருச்சபை உலகில் அமைதியின் அடையாளமாக மாறும் என்றார்.