சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
சிவகாசி, ஜன. 24: சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி பிகேஎஸ் ஆறுமுக நாடார் தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை சிவகாசி-சாத்தூர் ரோட்டில் சிவகாமிபுரம் காலனியில் உள்ளது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் தீப்பெட்டி உற்பத்தி பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது உராய்வு காரணமாக திடீரென தீ...
சாத்தூர் வந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு மலர்தூவி வரவேற்பு
சாத்தூர், ஜன.24: திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்த அம்ரித் பாரத் ரயில் சாத்தூர் வந்தடைந்தது. சாத்தூரில் பயணிகள் மலர்தூவி வரவேற்றனர். தென்னக ரயில்வேயில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை வழியாக தாம்பரத்துக்கு புதிய வாராந்திர அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்த ரயில் நேற்று மதியம்...
உருளைக்கிழங்கு திருடியவர் கைது சிஐடியு, ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
சிவகாசி, ஜன. 23: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் சித்திரைகனி (46). இவர் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகின்றார். இவரது கடைக்கு நேற்று காலை நான்கு மூட்டை உருளைக்கிழங்கு வந்துள்ளது. இதனை சித்திரைகனி கடையின் வெளியே வைத்துவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது 4...
அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம்
சிவகாசி, ஜன. 23: விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பரிந்துரையின் பேரில் புதிய நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். அதன்படி, எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளராக வி.எஸ்.பலராம், அதிமுக மாணவர் அணி துணைச் செயலாளராக வி.எம்.விஜய்ஆனந்த், அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராக முகமது நெய்னார், விருதுநகர்...
குளிக்க சென்ற பெண் சாவு
ராஜபாளையம், ஜன. 23: ராஜபாளையத்தில் குளிக்க சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ராஜபாளையம் தென்காசி சாலையை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி கலைச்செல்வி. இவர் உடல்நலம் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே...
ராஜபாளையத்தில் உடும்பை விழுங்கிய ராஜநாகம்
ராஜபாளையம், ஜன. 22: ராஜபாளையத்தில் நடுரோட்டில் உடும்பை ராஜநாகம் விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் செண்பகத் தோப்பு செல்லும் சாலையில் நேற்று 15 அடிக்கு மேல் நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று உடும்பு ஒன்றை பிடித்து விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போது அந்த வழியாக சென்ற காந்திராஜா என்பவர், இதை பார்த்துவிட்டு உடன் சென்ற நண்பருடன்...
இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம்
திருப்புத்தூர், ஜன.22: திருப்புத்தூர் அருகே இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருப்புத்தூர் அருகே கே.ஆத்தங்குடியில் தை மாதம் கிராம தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நேற்று நடைபெற்றது. கே.ஆத்தங்குடி - விராமதி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடு, சின்ன மாடு...
பூங்கா அமைக்க கோரிக்கை
தொண்டி, ஜன.22: தொண்டி கடற்கரை பகுதியில் பொதுமக்கள் பொழுது போக்க வசதியாக கடற்கரை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி கடற்கரை பகுதி மாவட்டத்தில் நீளமான கடற்கரையை கொண்டதாகும். வரலாற்று சிறப்புமிக்க இவ்வூருக்கு தினமும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால் கடற்கரை பகுதியில் எவ்வித வசதியும் இல்லாததால் முகம் சுழித்து செல்கின்றனர்....
திமுக இளைஞரணி சார்பில் பொங்கல் விழா விளையாட்டு போட்டி
அருப்புக்கோட்டை, ஜன.21: அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அருப்புக்கோட்டை தெற்கு, வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் திராவிட பொங்கல் விழா மற்றும் சமூக நீதிக்கான விழாவை முன்னிட்டு கோலப்போட்டிகள் ஆத்திப்பட்டியில் நடந்தது. தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகுஇராமானுஜம், வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தங்கமணி ஏற்பாட்டில்...

