வரி வசூலுக்கு சென்ற ஊராட்சி செயலரை சரமாரி தாக்கிய போதை ஆசாமி சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஒடுகத்தூர் அடுத்த குருவராஜாபாளையத்தில்

ஒடுகத்தூர், டிச.7: ஒடுகத்தூர் அடுத்த குருவராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவன்(38), இவர் அதே கிராமத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். அதேபோல் அதே கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(46), இவர் கேபிள் டிவி மற்றும் சுப விஷேசங்தளுக்கு பந்தல் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று குருவராஜாபாளையம் ஊராட்சியில் துணை...

வேலூர் மாவட்ட இளைஞரணியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் வேலூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு தீர்மானம் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாடு

வேலூர், டிச.7: திருவண்ணாமலையில் வரும் 14ம் தேதி நடைபெறும் வடக்கு மண்டல திமுக இளைஞரணி மாநாட்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து இளைஞரணியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று வேலூர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. வேலூர் தெற்கு மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது....

தீபத்திருவிழா சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.1.05 கோடி வருவாய் அதிகாரிகள் தகவல் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு

வேலூர், டிச.7: திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் மூலம் வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.1.05 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. அதேபோல் சித்ரா பவுர்ணமி விழாவில் திருவண்ணாமலை செல்லும் அதிகளவிலான...

9 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் போக்சோவில் தொழிலாளி கைது குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த

குடியாத்தம், டிச.6: குடியாத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த குருராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(60), தொழிலாளி. இவர் குடியாத்தம் நகரில் தொழிலதிபர் ஒருவரது வீட்டில் கடந்த 20 நாட்களாக கதவு, ஜன்னல் செய்து வந்துள்ளார். இதற்காக...

ஒரே நாளில் மீட்ட 3 யானைகளின் சடலங்களை 7 மருத்துவ குழுவினர் உடற்கூறாய்வு டிஎன்ஏ மாதிரி, உடல் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மலைப்பகுதியில்

பேரணாம்பட்டு, டிச.6: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மலைப்பகுதியில் ஒரே நாளில் மீட்ட, 3 யாைனகளின் சடலங்களை 7 மருத்துவக்குழுவினர் உடற்கூறாய்வு செய்தனர். டிஎன்ஏ மாதிரி, உடல்பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான சாத்கர் மலைப்பகுதியில் உள்ள அல்லேரி பகுதியில் 3 யானைகள் வெவ்வேறு இடங்களில் அழுகிய நிலையில்...

ஆடுகள் வரத்து குறைந்து ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம் ஒடுகத்தூர் வாரச்சந்தையில்

ஒடுகத்தூர், டிச.6: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் நேற்று ஆடுகள் வரத்து குறைந்து ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. சந்தையில் ரூ.30 லட்சம் முதல் 35 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் மற்றும் திருவிழா நாட்களில் பல லட்சத்திற்கு வர்த்தகம் நடக்கிறது. அதே...

குறை தீர்வு கூட்டம் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு தாசில்தார் தகவல் அணைக்கட்டு தாலுகாவின் மாதாந்திர

அணைக்கட்டு, டிச.5: அணைக்கட்டு தாலுகாவின் மாதாந்திர குறை தீர்வு கூட்டம் 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தாசில்தார் தெரிவித்தார். அணைக்கட்டு தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இந்த மாதம் நடக்க இருந்த குறைதீர்வு கூட்டம் இன்று (5ம் தேதி) நடைபெறும் என்று விவசாயிகளுக்கு...

104 அரசு பள்ளிகளுக்கு புதிய காஸ் அடுப்பு எம்எல்ஏ வழங்கினார் அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட

அணைக்கட்டு, டிச.5: அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட 104 அரசு பள்ளிகளுக்கு புதிய காஸ் அடுப்பை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வழங்கினார். அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் நிதி உதவிபள்ளி, வனத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்து வழங்குவதற்கு சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்ட காஸ் அடுப்புகளை பள்ளி சத்துணவு...

குடிநீர் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி தீவிரம் திருவலம் பேரூராட்சியில்

திருவலம், டிச.5: திருவலம் பேரூராட்சியில் குடிநீர் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து கழிவுநீர் கால்வாய் மூலம் வெளியேற்றுகின்றனர். அதேபோல் குப்பைகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் அகற்றி...

வேலூர் மாவட்டத்தில் தினமும் 30 புகார்கள் பதிவு; ஆன்லைன் வேலை, பேஸ்புக் மார்பிங் போட்டோ அனுப்பி மோசடி விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் எச்சரிக்கை

வேலூர், டிச.4: தமிழ்நாடு முழுவதும் சைபர் கிரைம் அதிகளவில் அரங்கேற தொடங்கிவிட்டது. இதனால் மாவட்டங்கள் தோறும் அந்தந்த எஸ்பி அலுவலகங்களில் சைபர் கிரைம் பிரிவு தனியாக தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் சைபர் கிரைம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆன்லைன் மோசடிகளில் 30 பேர் வரையில் பாதிக்கப்பட்டதாக...