இந்த நாள் ஆன்லைனில் பத்திரப்பதிவு மாற்றத்தை ஏற்க வேண்டும்
பல்லடம், ஆக.14: ஆன்லைனில் பத்திரப்பதிவு மாற்றத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று பல்லடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பத்திர ஆவண எழுத்தர்களுக்கு பத்திரப்பதிவு துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் முறையில் சொத்து ஆவணங்களை பதிவு செய்யும் ஆன்லைன் பத்திரப்பதிவு முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், சார்பதிவாளர்...
‘நிட்ஷோ’ கண்காட்சி 21ம் தேதி தொடங்குகிறது
திருப்பூர், ஆக. 13: 24வது ‘நிட்ஷோ’ கண்காட்சி வருகிற 21ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. காங்கயம் ரோடு ‘டாப்லைட்’ வளாகத்தில், கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இது குறித்து கண்காட்சி அமைப்பாளர் கிருஷ்ணா கூறியதாவது: கண்காட்சி 500 ஸ்டால்கள், 1,000க்கும் அதிகமான பிராண்டுகளுடன் தொடங்குகிறது. மத்திய அரசின் 100 சதவீத...
நிப்ட்-டி கல்லூரியில் பட்ஜெட் அமர்வு
திருப்பூர், ஆக. 13: நிப்ட்-டி கல்லூரியில் பிபிஏ இன்டர்நேஷனல் பிசினஸ் மற்றும் வணிகவியல் துறைகளின் சார்பில் தமிழ்நாடு நேரடி பட்ஜெட் அமர்வு 2026-27 என்ற கல்விசார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கல்லூரி டீன் சம்பத் மற்றும் முதல்வர் ராதாமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநில பட்ஜெட், அரசின் கொள்கைகள், பொது செலவினம் மற்றும் தமிழ்நாட்டின்...
ராகவேந்திரர் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் செலுத்திய மக்கள்
திருப்பூர்,ஆக.13: ஆடி அமாவாசையையொட்டி திருப்பூரில் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்துக்கள் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமானது. அந்த வகையில் ஆடி அமாவாசையான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி)...
காங்கயம் நகராட்சி கூட்டத்தில் 87 தீர்மானங்கள் நிறைவேறின
காங்கயம், ஆக.12: காங்கயம் நகராட்சி கூட்டம் நேற்று நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தார். இதில் 18 வார்டுகளில் அடிப்படை வசதிகளான பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு, தூய்மை பணிகள் மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிட பராமரிப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும்...
கருவூலம் மூலம் ஊதியம் வழங்கக்கோரி மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஆக. 12: 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளகோவில் நகராட்சி ஊழியர் திருமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் குமரவேல் வரவேற்றார்....
இன்று ஆடி அமாவாசை வழிபாடு; காய்கறி, பூக்கள் விலை உயர்வு
திருப்பூர், ஆக.12: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் கோயில்களில் விஷேச வழிபாட்டிற்கு உகந்த மாதமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஆடி மாத வெள்ளிக்கிழமை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் ஆகிய நாட்கள் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (12ம்தேதி) ஆடி அமாவாசை தினம் என்பதால் வீடுகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, சிறப்புப் பூஜைகள்...
தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருப்பூர்,ஆக.10: திருப்பூர் அருகே சுடுகாட்டில் மரங்களை வெட்டி கடத்திய தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பபட்டுள்ளது. திருப்பூர் பொங்குபாளையம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த சுடுகாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழமை வாய்ந்த...
கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
திருப்பூர், ஆக. 10: திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வெள்ளியங்காடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்....
