கொசஸ்தலை தடுப்பணையில் மெகா சைஸ் பள்ளம்
ஊத்துக்கோட்டை, மார்ச் 12: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கொசஸ்தலையாற்றின் தடுப்பணை நடுவில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் பகுதியில் கடந்த 2024ம் வருடம் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் ஆறு, ஏரிகளில் நீர் நிரம்பி காணப்பட்டது. இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர்...
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரம் கிடந்த மர்ம பெட்டியால் பீதி
திருவள்ளூர், மார்ச் 12: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவர் அருகே சாலையின் நடப்பாதையில் கருப்பு நிறத்தில் மர்ம பெட்டி ஒன்று கிடந்தது. இதனைப் பார்த்த சிலர், வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த...
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு தொடக்கம்
திருவள்ளூர், மார்ச் 11: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு (11ம் தேதி) இன்று முதல் தொடங்கி வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 31,483 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும்...
சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருவள்ளூருக்கு துணை ராணுவம் வருகை
திருவள்ளூர், மார்ச் 11: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, உத்தரபிரதேசத்தில் இருந்து துணை ராணுவ படையினர் சிறப்பு ரயில் மூலம் திருவள்ளூருக்கு வந்துள்ளனர். தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும் என்பதால், தமிழக தேர்தல் பணிக்கு...
பஞ்செட்டி கிராமத்தில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி வருவாய் அலுவலரிடம் மனு
திருவள்ளூர், மார்ச் 11: திருவள்ளூர் அருகே பஞ்செட்டி கிராமத்தில் சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம், அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட நலக்குழு உறுப்பினர் நீலவானத்து நிலவன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா பஞ்செட்டி என்ற கிராமத்தை சுற்றிலும் சுமார் 10 கிராமங்கள் உள்ளன. இந்த, கிராமங்களில் பல்லாயிரக்கணக்கில்...
100 நாள் வேலை திட்ட குறை தீர்ப்பாளர் நியமனம்
திருவள்ளூர், மார்ச்.10: திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட குறை தீர்ப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரதாப் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறையை தீர்ப்பதற்காக, குறை தீர்ப்பாளராக ஆண்டனி சிலுவை என்பவர்,...
கடலில் தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு
மாதவரம், மார்ச் 10: திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த மீனவர் பழனி (56). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிப்பதற்காக ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவை சேர்ந்த முத்துகுமரன் என்பவருடைய விசைப்படகில் பழனி, வேலு, மணி, வினோத், தேசக்கண்ணு, மல்லி, ராமச்சந்திரன், நாராயணன், ராஜா உள்ளிட்ட 9 பேர்...
குடிசை வீடு எரிந்து சாம்பல் தீயில் கருகி 10ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி
பொன்னேரி, மார்ச் 10: மீஞ்சூர் அருகே ஊரணம்பேடு கிராமத்தில் மின் கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பலானதில், உள்ளே படுத்து இருந்த பத்தாம் வகுப்பு மாணவன் உடல் கருகி பரிதாபமாக பலியானான். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணம்பேடு கிராமத்தில் விநாயகர் கோயில் தெருவில் வசித்து வருபவர் முனுசாமி-மாலதி தம்பதியரின் மகன் சீனிவாசன்(15)....
பொதுமக்களுக்கு இடையூறு தட்டிக் கேட்ட போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய 3 வாலிபர்கள் கைது
திருவள்ளூர், மார்ச் 9: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர்கள் நீலமேகம், சுமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கடம்பத்தூர், வெண்மனம்புதூர், அகரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். பிஞ்சிவாக்கம் ஆற்று பாலம் அருகில் ரோந்து பணி ஈடுபட்டபோது அங்கிருந்த 3 வாலிபர்கள் கையில் கத்தியை வைத்துக்கொண்டு...
