டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திருச்செங்கோடு, ஜூலை 17: திருச்செங்கோடு நகராட்சி சார்பில், டெங்கு கொசு ஒழிப்பு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை, நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். திருச்செங்கோடு மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் நகராட்சி...
ரூ..80 லட்சத்தில் இலவச சேவைகள்
நாமகிரிப்பேட்டை, ஜூலை 17: வெண்ணந்தூர் ஒன்றியம், அனந்தகவுண்டம்பாளையம் ஊராட்சியில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துரைசாமி நினைவு நிழற்கூடம், 100 அடி உயரம் கொண்ட திமுக கொடி கம்பம், கிரிக்கெட் மற்றும் கபடி ஸ்டேடியம் உள்ளிட்ட ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் இலவச சேவைகளை, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி தொடங்கி வைத்தார்....
சிறுமிக்கு தொல்லை கொடுத்த வாலிபர்போக்சோவில் கைது
நாமகிரிப்பேட்டை, ஜூலை 16: நாமகிரிப்பேட்டை அருகே, சிறுமியிடம் காதலிக்க வற்புறுத்தி தாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் அருண்குமார்(25). கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த, 16 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த சிறுமி...
சொத்து தகராறில் வீட்டை சூறையாடிய வழக்கில் 8 பேருக்கு 15 ஆண்டு சிறை திருச்செங்கோடு நீதிமன்றம் தீர்ப்பு
திருச்செங்கோடு, ஜூலை 16: திருச்செங்கோடு அருகே, வீட்டை சூறையாடிய வழக்கில், 8 பேருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்செங்கோடு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கூட்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவர் நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் ராஜ்குமார் என்பவரிடம், ரூ.15 லட்சம் கடனாக பெற்றிருந்தார். இதில் ரூ.8 லட்சம்...
ராசிபுரம் நகர வளர்ச்சிக்காக ரூ.10.58 கோடியில் கட்டப்பட்ட பஸ் நிலையம் திறக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ராசிபுரம், ஜூலை 16: ராசிபுரம் நகரின் வளர்ச்சிக்காக ரூ.10.58 கோடியில் கட்டப்பட்ட பஸ் நிலையம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சேலம் நகராட்சிக்கு அடுத்தபடியாக உருவானது ராசிபுரம் நகராட்சி. ஆனாலும், ராசிபுரம் நகரம் பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இதற்கு பின்பு உருவான நாமக்கல், திருச்செங்கோடு...
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி
நாமக்கல், ஜூலை 15: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் இன்று நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயர் சூட்டப்பட்ட ஜூலை, 18ம் தேதி மாநில அரசு ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்டத்தில்...
கொல்லிமலை கோயில்களில் குவிந்த பக்தர்கள்
சேந்தமங்கலம், ஜூலை 15: கொல்லிமலையில் ஆனி அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள் ஆகாய கங்கையில் நீராடி வழிபாடு நடத்தினர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுலா தலமாக மட்டுமில்லாமல் ஆன்மீகப் பகுதியாகவும் உள்ளது. ஏராளமான சித்தர்கள் வாழ்ந்ததாக வரலாற்று சுவடுகள் சொல்கிறது. மூலிகை வனம் நிறைந்த கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், மாசி...
சிறு வியாபாரிகள் தற்காலிக கடை அமைக்க நிபந்தனையுடன் அனுமதி
நாமக்கல், ஜூலை 15: நாமக்கல் பூங்கா சாலையில் 100க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள், சாலையோரம் தற்காலிக கடைகள் அமைத்து பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் மாநகராட்சி அலுவலர்கள் கடன் வசதியும் செய்து கொடுத்துள்ளனர். பூங்கா சாலையில் உள்ள கடைகளை மாநகராட்சி அலுவலர்கள்,...
நாமக்கல் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் 852 மனுக்கள் குவிந்தன
நாமக்கல், ஜூலை 14: நாமக்கல்லில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 852 மனுக்கள் குவிந்தன. இதில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுபாலன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான...

