வேதாரண்யம் அருகே அவ்வையார் மணிமண்டபம் பணி: ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு ஆய்வு

  வேதாரண்யம், ஜூன் 15: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாபட்டினம் கிராமத்தில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகளை வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் ஆய்வு செய்தார். நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா துளசியாபட்டினம் கிராமத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு மணி மண்டபம் அமைக்கும் பணிகள்...

கடுவையாற்றில் 10கிமீ தூரம் பரந்து கிடக்கும் ஆகாயதாமரை

  நாகப்பட்டினம், ஜூன் 16: நாகப்பட்டினம் அருகே கடுவையாற்றை சூழ்ந்து ஆகாயத்தாமரை புதர்போல் மண்டி கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைகோடி மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீரை மட்டுமே நம்பி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில் நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர்...

நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

  நாகப்பட்டினம், ஜூன் 16: நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1000 மனுக்கள் குவிந்தன. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 நபர்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. இக்குறைதீர் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப...

இலங்கை சிறையில் உள்ள மீனவரை மீட்டுத்ததர அமைச்சரிடம் கோரிக்கை மனு

  தரங்கம்பாடி, ஜூன் 15: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தரங்கம்பாடியை சேர்ந்த மீனவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் வெங்கட்ரமணனிடம் பெற்றோர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடிக்கு கடந்த 5 தினங்களுக்கு முன் வருகை தந்த உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணனிடம் மீனவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:...

சீர்காழியில் இலவச கண் பரிசோதனை முகாம்

  சீர்காழி, ஜூன் 15: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஜெயின் சங்க கட்டிடத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், எஸ்எஸ் ஜெயின் சங்கம், சீர்காழி ஜேசிஐ கிரீன் சிட்டி ஸ்ரீ ஜகாராம்ஜி ஸ்ரீமதி சீதாதேவி நினைவாக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது. இந்த முகாமில் அரவிந்த்...

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுபெற விண்ணப்பிக்க அழைப்பு

  நாகப்பட்டினம், ஜூன் 15: முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வரும் ஜூரவ 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர்...

கொள்ளிடம் பகுதியில் 2 வது நாளாக மழை

கொள்ளிடம், ஜூன் 13: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இடையிடையே அதிக காற்றும் வீசி வருகிறது. வறண்ட வானிலை காணப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை வானம் இருண்டு மழை பெய்ய துவங்கியது. சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்ததால்...

காரைக்கால் தெற்கு தொகுதியில் முதியோருக்கு போர்வை, காலணிகள்

காரைக்கால், ஜூன் 13: காரைக்கால் தெற்கு தொகுதியில் 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு போர்வை மற்றும் காலணிகளை நாஜிம் எம்எல்ஏ வழங்கினார். புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட முதியோர் உதவித்தொகை பெறும் 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு போர்வை மற்றும் காலணிகள் வழங்கும் நிகழ்ச்சி...

கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற வாலிபர் கைது

மயிலாடுதுறை, ஜூன்13: மயிலாடுதுறையில் ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் மயிலாடுதுறை கூட்டுறவு நகர்...

கொள்ளிடம் அருகே குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுகாதார கேடு

கொள்ளிடம், ஜூன் 11: கொள்ளிடம் அருகே கீழவல்லம் கிராமம் குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படும் நிலையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் இருந்து கீழவல்லம் செல்லும் சாலையோரம் குட்டை அமைந்துள்ளது. இதிலிருந்து தண்ணீர் வெளியேற வழியின்றி தேங்கியே கிடக்கிறது. அப்பகுதியில் உள்ள...