காவேரி மருத்துவமனை சார்பில் உறுப்பு தானம் செய்த குடும்பங்கள் கவுரவிப்பு
ஓசூர், ஆக.14: உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினரை கவுரவிக்கும் நிகழ்ச்சி, காவேரி மருத்துவமனை சார்பில் ஓசூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்....
ஓசூரிலிருந்து வழக்கம் போல் பஸ்கள் இயக்கம்
ஓசூர், ஆக.14: கர்நாடகாவில் மேகதாது அணை திட்டத்தை, கர்நாடக அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு மற்றும் அமைப்புகளை கண்டித்தும், கர்நாடகாவில் சில கூட்டமைப்புகள் சார்பில் நேற்று ‘கர்நாடக பந்த்’ (முழு அடைப்பு போராட்டம்) நடத்தப்பட்டது. இந்த பந்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம்...
எம்கேஎஸ் கோபிகிருஷ்ணா பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியேற்பு
காவேரிப்பட்டணம், ஆக.13: காவேரிப்பட்டணம் அருகே தாசம்பட்டி கூட்டுரோடு பகுதியில் செயல்பட்டு வரும் எம்கேஎஸ் கோபிகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியேற்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் மாதன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் ஜெயசீலன் வரவேற்றார். செயலாளர் ராதிகா புஷ்பக், இணை தலைவர் திவ்யா பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் புஷ்பக், துணைத்தலைவர்...
மின் மோட்டார்கள் திருட்டு அதிகரிப்புபோலீசில் புகார்
போச்சம்பள்ளி, ஆக.13: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் மற்றும் நாகனூர், பூசாரிக்கொட்டாய், மோட்டூர், புளியாண்டப்பட்டி, போக்கம்பட்டி, களர்பதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 20 மின் மோட்டார்களும், 100க்கும் மேற்பட்ட கிணறுகளில் உள்ள மின் மோட்டார் கேபிள் ஒயர்களும் திருடு போய் உள்ளன. மின்மோட்டார் திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக விவசாயிகள்...
சூதாடிய 11 பேர் கைது: ரூ.11 ஆயிரம் பறிமுதல்
கிருஷ்ணகிரி, ஆக.13: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் எஸ்எஸ்ஐ வெங்கடேஷ்பெருமாள் மற்றும் போலீசார் குண்டியல்நத்தம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள செல்வகுமார் என்பவரின் வீட்டின் பின்புறம், சூதாடிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அவர்கள் அத்திமரத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார்(57), சின்னகரகப்பட்டி செந்தில்குமார்(47), கந்திலி கிராமம் இம்ரான் (33), கிருஷ்ணகிரி பழையபேட்டை...
ரூ.18 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்
போச்சம்பள்ளி, ஆக.12: போச்சம்பள்ளி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் இ- நாம் முறையில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ.165க்கும், குறைந்த பட்சமாக ரூ.106க்கும், சராசரியாக ரூ.163க்கும் விற்பனையானது. இதில் 11,820 கிலோ கொப்பரை ரூ.18,41,157க்கு ஏலம் போனது. இதன் மூலம் 188 விவசாயிகள் பயணடைந்தனர். இதுகுறித்து போச்சம்பள்ளி ஒழுங்கு முறை விற்பனை...
ஜாமீனில் வந்து வழக்கில்ஆஜராகாத இருவர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி, ஆக.12: கிருஷ்ணகிரியில் ஜாமீனில் வந்து வழக்கில் ஆஜராகாத, இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த தண்டேகுப்பத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவரை கடந்த 2021ம் ஆண்டு நடந்த திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில், குருபரப்பள்ளி போலீசார் கைது செய்தனர். இதேபோல், சூளகிரி அடுத்த பேரிகையை சேர்ந்தவர் சதீஷ்(30). இவரை...
யானை குறுக்கே வந்ததால் டூவீலரில் இருந்து விழுந்து அண்ணன், தம்பி காயம்
தேன்கனிக்கோட்டை, ஆக.12: அஞ்செட்டி அருகே மலை வழிச்சாலையில் சென்றபோது, யானை குறுக்கே வந்ததால் வண்டியிலிருந்து விழுந்து அண்ணன்- தம்பி படுகாயமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே அனுசோனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் (28), பாக்யராஜ் (25). அண்ணன்- தம்பியான இவர்கள் ஒரே டூவீலரில் அஞ்செட்டியில் இருந்து மலைச்சாலையில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, குந்துக்கோட்டை அருகே...
மத்தூரில் பாரம்பரிய நெல் திருவிழா
போச்சம்பள்ளி, ஆக. 10: மத்தூரில் 3ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா கோலாகலமாக நடந்தது. மத்தூரில் 3ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா கோலாகலமாக நடந்தது. இதனை மத்தூர் வட்டார இயற்கை விவசாய நலச்சங்கம், பாரம்பரிய இயற்கை விவசாய பெண்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நடத்தியது....
