5,175 மி.கன அடியாக குறைந்தது; சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் நீர் இருப்பு சரிவு
குன்றத்தூர், செப்.8: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் இருந்து, தற்போது 5,175 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை மற்றும் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகின்றன. இவ்வாறு பெய்து...
வரதராஜ பெருமாள் கோயிலில் திருவடி கோயில் புறப்பாடு உற்சவம்
காஞ்சிபுரம், செப்.8: 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசியையொட்டி திருவடி கோயில் புறப்பாடு உற்சவம் நேற்று நடைபெற்றது. திருவடிகோயில் புறப்பாடு உற்சவத்தை முன்னிட்டு அத்திகிரி மலைமீது இருந்து இறங்கிய வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. ஆரஞ்சு நிற பட்டுடுத்தி, தங்க, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ,...
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணிகளை ஏறவிடாமல் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்: வீடியோ வைரல்
தாம்பரம், செப்.7: சென்னை எழும்பூரில் இருந்து நேற்று முன்தினம் வேளாங்கண்ணி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையம் வந்தது. அப்போது தாம்பரம் ரயில் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ரயிலில் ஏற முயற்சித்தபோது, ரயில் பெட்டிக்குள் செல்லும் வழியில் சில இளைஞர்கள் அமர்ந்துகொண்டு உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ரயிலில்...
சென்னை புறநகரில் தொடரும் ஏடிஎம் கொள்ளைகள் குற்றவாளிகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: அன்புமணி கண்டனம்
ஸ்ரீபெரும்புதூர், செப்.7: பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏடிஎம் ஒன்றை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் உடைத்து, அதில் இருந்த ரூ.11.50 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் பரபரப்பு அடங்குவதற்குள் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சோமங்கலம் பகுதியில் மற்றொரு வங்கிக்கு சொந்தமான...
வடகிழக்கு பருவ மழையையொட்டி முட்டுக்காடு முகத்துவாரம் ரூ.1.6 கோடியில் சீரமைப்பு
திருக்கழுக்குன்றம், செப்.7: வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை சார்பில் முட்டுக்காடு கடல் பகுதியில் உள்ள மணல் குவியல் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு முகத்துவாரம் திறக்கப்பட்டது. வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால் கடலோர பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் தமிழக அரசு வெள்ள தடுப்பு முன் எச்சரிக்கை...
பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: 110 கிராம் பறிமுதல்
செங்கல்பட்டு, செப்.5: செங்கல்பட்டில் பள்ளி வளாகத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்களை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து சிறையில் அடைப்பது மட்டும் அல்லாமலும், அவர்களின் வங்கி கணக்கை முடக்குவது போன்ற...
காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், செப்.5: காஞ்சிபுரத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில மையம் சார்பில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு...
மூடிக் கிடக்கும் கொள்முதல் நிலையங்கள்; நெற்குவியல் மழைக்கு நனைந்து முளைத்து வீணாகும் அவலம்
* விவசாயிகள் வேதனை * அரசு நடவடிக்கை எடுக்குமா? காஞ்சிபுரம், செப்.5: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான நெல் கொள்முதல் நிலையங்கள் மூடியே கிடப்பதால், அறுவடை செய்யப்பட்ட நெல் குவியல்கள் மழையில் நனைந்து முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொர்ணாவாரி பருவ நெல் அறுவடை பணிகளில்...
புதிய சிம் கார்டு பெற அதிக கட்டணம் வசூல்; ஷோரூம் உரிமையாளருக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
செங்கல்பட்டு, ஆக.29: தொலைந்து போன சிம் கார்டுக்கு பதிலாக புதிய சிம்கார்டு பெற ஏர்டெல் நிறுவனத்தின் முகவர் அதிக கட்டணம் வசூல் செய்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு அவர் ரூ.40,000 இழப்பீடு வழங்க செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டில் வசிக்கும் சரிதா என்பவர் கடந்த 21.09.2025 அன்று தனது செல்போனை தவற...


