வாலிபரை எரித்து கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
பவானி, நவ.11: அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம் கோவிலூரை சேர்ந்தவர் சித்தமலை மகன் முருகன் (52). அதே பகுதியைச் சேர்ந்தவர் அரியா கவுண்டர் மகன் தங்கராசு (38). இருவருக்கும் மது வாங்கி வருவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2.8.2020ம் தேதி தங்கராசு தனது மாமா சின்னசாமி என்பவர் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டின்...
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 295 மனுக்கள்
ஈரோடு, நவ.11: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித்தொகைகள் கேட்டும், வீட்டுமனைப்பட்டா, கல்விக்கடன், கலைஞரின் கனவு இல்லம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 295 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றன. மனுக்களை பெற்றுக் கொண்ட...
ஈரோட்டில் பாஜவினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, நவ.7: ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் பாஜ மகளிர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சண்முகபிரியா தலைமை தாங்கினார். சரஸ்வதி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம்...
அம்மாபேட்டை காவிரிகரை மீனாட்சி உடனமர் சொக்கநாதருக்கு 108 மூலிகை தீர்த்த அபிஷேகம்
பவானி, நவ. 7: அம்மாபேட்டை காவிரி ஆற்றங்கரையில் உள்ள மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோயிலில் 108 மூலிகை தீர்த்த அபிஷேக வழிபாடு நேற்று நடைபெற்றது. சிவனடியார் வெங்கடேசன் குழுவினர், இந்திய அளவில், 107 சிவன் கோயில்களுக்கு சென்று, 108 மூலிகைகள் கலந்த தீர்த்த அபிஷேக வழிபாடு நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, 108-ஆவது கோயிலாக அம்மாபேட்டை...
ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் ஏர்ஹாரன் ஒலித்த 6 பஸ்களுக்கு அபராதம்
ஈரோடு, நவ. 7: ஈரோடு மத்திய பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இடையூறாக ஏர்ஹாரனை ஒலிக்க செய்த 6 தனியார் பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டில் தினசரி 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சில தனியார் பஸ்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கவனத்தை...
திமுக இளைஞரணி சார்பில் முப்பெரும் விழா தமிழக முதலமைச்சருக்கு அழைப்பிதழ்
மொடக்குறிச்சி, நவ.6: திமுக இளைஞரணி சார்பில், முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிடும் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியீடு. ‘இருவண்ண கொடிக்கு வயது 75 எனும் இருநாள் கருத்தரங்கம், அரசியல் புத்தகங்கள் மட்டுமே இடம்பெரும் ‘ முற்போக்கு புத்தகக் காட்சி’ ஆகிய முப்பெரும் நிகழ்வுகளுக்கான அழைப்பிதழை சென்னையில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான...
சாலையோரம் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்
ஈரோடு, நவ. 6: ஈரோடு மாநகராட்சி பகுதியில், உரிய அனுமதியின்றியும், சாலைகளை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், சாலைகளை ஆக்கிரமித்தும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பிளக்ஸ் பேனர்களை அகற்ற, ஆணையர் அர்பித் ஜெயின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மாநகரத்தின் முக்கிய சாலைகளில் மாநகராட்சி...
மது விற்ற 2 பேர் கைது
ஈரோடு, நவ. 6: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குய்யனூர் டாஸ்மாக் கடை அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், சத்தியமங்கலம் போலீசார் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று, டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த புது குய்யனூர்...
கேரளா லாட்டரி விற்றவர் கைது
ஈரோடு, நவ. 5: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஈரோடு சாலையில் கவுந்தப்பாடி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த கவுந்தப்பாடி குருமூர்த்தி காலனியை சேர்ந்த சதீஷ் என்ற கண்ணன் (38) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து...
