கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று வினாடிக்கு 1180 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 2,893 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.45 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,893 கனஅடி. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1300 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 3311 மில்லியன் கன அடி.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.66 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1760 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 2995 மில்லியன் கனஅடி. 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 120.70 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 10 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் இருப்பு நீர் 171.50 மில்லியன் கனஅடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 100 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 435.32 மில்லியன் கனஅடி. மழையளவு: பெரியாறு 32.2 மி.மீ, தேக்கடி 45 மி.மீ, கூடலூர் 5.2 மி.மீ, பாளையம் 5.6 மி.மீ, சோத்துப்பாறை 48 மி.மீ, வைகை அணை 24 மி.மீ, மஞ்சளாறு 24 மி.மீ, சண்முகாநதி 6.8 மி.மீ.