தேனி: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்துள்ளது. கடந்த 6ம் தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக இருந்த நிலையில் இன்று 131.30 அடியாக உயர்ந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு வினாடிக்கு 1052 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.