டெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது ஒன்றிய அரசின் அதிகார எல்லைக்குட்பட்டது, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பை அவ்வப்போது நடத்த வேண்டும் என இந்திரா சகானி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வாதம் முன்வைக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.