திருமலை: ஆந்திராவில் வருகிற 15ம்தேதி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் வெலகம்புடியில் உள்ள தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், 38 அம்சங்களுடன் கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதால், மாநிலம் முழுவதும் வருகிற 15ம்தேதி முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.