பாட்னா: ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என ஒன்றிய அரசுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து நடந்த விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,‘‘ அடுத்தாண்டு மக்களவை தேர்தலுக்கு பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்’’ என்றார்.
இந்நிலையில்,பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘10 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 ஆண்டுக்கும் மேலாக தாமதமாகி வருகிறது. மேலும், இதை தாமதப்படுத்தக்கூடாது. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த பீகார் அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்தது. இதே போன்ற கணக்கெடுப்பின் மூலம் தலித், பழங்குடியினர் அல்லாத இதர சமூகத்தினர் பயன்அடைவார்கள்’’ என்றார்.