ராஞ்சி: லோக் ஜன சக்தி(ராம்விலாஸ் பஸ்வான்) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் சிராக் பஸ்வான் லோக் ஜன சக்தி(ராம் விலாஸ் பஸ்வான்) கட்சி தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பின்னர் பேட்டியளித்த சிராக் பஸ்வான், “அடுத்த 5 ஆண்டுகளுக்கு கட்சி தலைவராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்த கூட்டத்தில் அரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தல்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம். இதை எங்கள் கட்சி எப்போதும் வலியுறுத்தி வருகிறது. அது அரசாங்கத்திடம் அனைத்து பிரிவு மக்களின் சரியான எண்ணிக்கை இருப்பதை உறுதி செய்யும் என்றார்.