மதுரை: ஜாதி மறுப்பு திருமணம் செய்த மதுரையை சேர்ந்த தீபன் – கவுசல்யா தம்பதிக்கு பாதுகாப்பு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் தங்களை பெற்றோர் கொல்ல முயற்சிப்பதாகவும் பாதுகாப்பு கோரியும் கவுசல்யா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், பாதுகாப்பு கோரி சம்பந்தப்பட்ட போலீசாரை அணுகி தம்பதியினர் மனு அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.