மதுரை: கன்னியாகுமரி மாவட்ட தேரூர் பேரூராட்சி தலைவர் அமுதாராணியின் சாதி சான்றை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. கன்னியாகுமரி தேவகுளத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அளித்திருந்த மனுவில், வட்டாட்சியர் அல்லது கல்வி பயிலும் பள்ளிக்கூடங்கள் தான் ஒருவருக்கு சாதி சான்றிதழ் அளிக்க வேண்டும். ஆனால் இரண்டு பேருமே சான்று வழங்கவில்லை என மனுதாரர் தரப்பு வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நெல்லை ஆட்சியர், சாதி சான்றிதழ் சரிபார்த்தல் விழிப்புணர்வு குழு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.
ஜாதி சான்று ரத்து கோரிய மனு: ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை
previous post