மீண்டும் பழைய சம்பிரதாயங்களைக் காத்திட பூர்வீக அக்ரஹாரங்களை உருவாக்கத் திட்டம் என விளம்பரம் வந்துள்ள நிலையில், தெருப்பெயரில் கூட அரசு ஆணைப்படி ஜாதி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாட்டில், இதனை அனுமதிக்கலாமா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். பழைய ஜாதி வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கக் கூடாது. அமைதிப் பூங்காவை அமளிக் காடாக்கக் கூடாது என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.