டெல்லி: ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக ஓ.பி.சி. நலத்துறைக்கான நாடாளுமன்ற குழு ஆலோசனை நடத்த உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஜே.டி.யு. கட்சியும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் ஆலோசனை கூட்ட நிகழ்ச்சி நிரலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட்டுள்ளது.