முந்திரி – 1/2 கப்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
நற்பதமான துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு…
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பூண்டு – 4 பற்கள் (தட்டியது)
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் முந்திரிப் பருப்பை சிறிது உப்பு சேர்த்த வெதுவெதுப்பான நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளிக்கவும்.பின்பு அதில் வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.பிறகு ஊற வைத்துள்ள முந்திரி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் குறைவான தீயில் வைத்து வதக்கவும்.பின் உப்பு, சர்க்கரை மற்றும் 1.4 கப் நீரை ஊற்றி மூடி வைத்து, 5-10 நிமிடம் முந்திரி மென்மையாகும் வரை வேக வைக்கவும்.அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து, நீர் முற்றிலும் வற்றும் வரை நன்கு கிளறி, வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான கார்வார் ஸ்டைல் முந்திரி சப்ஜி தயார்.