புதுடெல்லி: ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஊழல் புகாா் தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த செப்டம்பரில் முதல் கட்டமாக சோதனை நடத்தியது. இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சோதனையில் கணக்கில் வராத ரூ.48லட்சம் ரொக்கம், ரூ.1.73கோடி மதிப்புள்ள வங்கி டெபாசிட், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ’ என்று குறிப்பிட்டு உள்ளது.