எல்லை தாண்டி மீன்பிடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. வழக்கை விசாரித்த இலங்கை புத்தளம் நீதிமன்றம், தூத்துக்குடி மீனவர்களுக்கு செப்.3 வரை காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.