சென்னை: நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேசிய மகளிர் ஆணையம் எக்ஸ் பக்கத்தில் நடிகை த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் இந்த விவகாரம் தொடர்புடைய இதர சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு டி.ஜி.பி.க்கு உத்தரவிடுகிறோம்.
இது போன்ற கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகிறது, இத்தகைய பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாடு டிஜிபி நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியதையடுத்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 (எ), 509 ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் நடிகர் மன்சூர் அலிகான மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.