மதுரை: மதுரை, கரூர், திருச்சி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் நியமிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியை திறக்கிறீர்கள், ஆனால் முதல்வர்கள் நியமிக்கப்படுவதில்லை. முதல்வர்களை நியமனம் செய்ய இயலவில்லை எனில் மருத்துவக்கல்லூரிகளை திறப்பது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த வெரோணிக்கா மேரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.