தென்காசி: தென்காசி மாவட்டத்தில் செங்கல் சூளைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மாவட்ட நிர்வாகம் அனுப்பிய நோட்டீசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவு. தென்காசியைச் சேர்ந்த மாரிமுத்து, பூமிநாதன் உள்ளிட்ட 9 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், மாவட்ட ஆட்சியர், சிவகிரி கோட்டாட்சியர் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.