திருச்சி: வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்காத பெண் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் பணியை முறையாக செய்யாத காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணியை (45) அவர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். கோர்ட்டுக்கு சென்ற ஒரு வழக்கு விவகாரம் தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காததால் அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது இன்ஸ்பெக்டர் அம்சேவணி விடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் காவல் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கில் நடவடிக்கை எடுக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
previous post