காஞ்சிபுரம்: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது , கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎஃப் வாசன் சாகசம் செய்ய முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.