திருவனந்தபுரம்: நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஜெயசூர்யா மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். படப்பிடிப்பின்போது நடிகைக்கு ஜெயசூர்யா பாலியல் துன்புறுத்தல் என புகார் எழுந்தது. இதனிடையே பாலியல் வழக்குகளில் சிக்கிய நடிகர் சித்திக் மற்றும் இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் கைதாக வாய்ப்பு உள்ளது. பாலியல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டும் பணியில் கேரள போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நடிகர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்களை திரட்டிய பிறகு அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.