புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசு 9 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில்,அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிவிட்டரில் பதிவிடுகையில், கொடிய பணவீக்க விகிதத்தால் கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் சம்பாத்தியத்தை பாஜ அரசு கொள்ளையடித்து விட்டது. அனைத்து அத்தியாவசிய பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.மேலும், பட்ஜெட்டை பாழாக்கி வாழ்க்கையை கடினமாக்கி விட்டது’’என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிடுகையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வே பாஜ அரசின் சாதனை. இன்னும் சில நாட்களுக்கு ஒன்றிய அமைச்சர்கள் பலர் மோடியின் 9 ஆண்டுகால சாதனைகளை குறித்து தம்பட்டம் அடிப்பார்கள்’என தெரிவித்துள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் கார்கேவின் ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் பல மடங்கு அதிகரித்துவிட்டதாக குற்றம் சாட்டி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் தற்போது அந்த பொருட்களின் விலையும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பொருட்கள் 2014 2023
கேஸ் விலை ரூ.410 ரூ.1,103
பெட்ரோல் ரூ.71 ரூ.97
டீசல் ரூ.57 ரூ.90
அரிசி ரூ.36 ரூ.80
சமையல்
எண்ணெய் ரூ.90 ரூ.150
நெய் ரூ.300 ரூ.700
பால் ரூ.35 ரூ.66