ஜிண்ட்: அரியானா மாநிலம் ஜிண்ட் மாவட்டம் கரசிந்து கிராமத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் வாட்ச்மேனாக ரிஷிபால் (57) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று அவர், பள்ளி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் ரிஷிபாலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரிஷிபாலின் உடல் அருகே கிடைத்த தற்கொலைக் குறிப்பு மற்றும் அவரது மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக பள்ளி முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
போலீசாரால் கைப்பற்றப்பட்ட தற்கொலை குறிப்பு கடிதத்தில், பள்ளியின் முதல்வர் சுடியா ராம், ஆசிரியர்கள் தரம்பால் மற்றும் ஹர்கேஷ் சாஸ்திரி ஆகியோரால் தான் துன்புறுத்தப்பட்டதாக ரிஷிபால் குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.