கிருஷ்ணகிரி: தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமாரும், திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ செங்குட்டுவனும் போட்டியிட்டனர். இதில், 794 ஓட்டு வித்தியாசத்தில் அசோக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து செங்குட்டுவன் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க தடை கோரி அசோக்குமார் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், வரும் 21ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. செங்குட்டுவன் தரப்பு மனுப்படி, குளறுபடி செய்யப்பட்டதாக கூறப்படும் தபால் ஓட்டுகள், 79 மற்றும் 95வது பூத் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக, கிருஷ்ணகிரி ஆர்டிஓ அலுவலக பாதுகாப்பு அறையிலிருந்து கலெக்டர் சரயு முன்னிலையில் அதிகாரிகள் ஐகோர்ட்டுக்கு எடுத்துச் சென்றனர்.