சுல்தான்பூர்: ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியாக இருப்பவர் சஞ்சய்சிங். கடந்த 2001ல் உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் சப்ஜி மண்டியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் மின்தடையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சஞ்சய்சிங் உள்ளிட்டோர் மீது கோட்வாலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் நீதமன்றத்தில் ஆஜராகாததால் சஞ்சய்சிங் உள்பட 6 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போதும் சஞ்சய்சிங் உள்பட 6 பேரும் ஆஜராகாததால் அனைவரையும் கைது செய்து ஆக.28ல் நேரில் ஆஜர்படுத்தும்படி எம்பி,எம்எல்ஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுபம் வர்மா உத்தரவிட்டார்.