சென்னை: சென்னை தரமணி ராஜீவ் காந்தி சாலையில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சாலை தடுப்பில் மோதாமல் இருக்க ஓட்டுநர் திடீரென பிரேக் போட்ட போது கார் கவிழ்ந்தது. கார் கவிழ்ந்த நிலையில் ஓட்டுநரும், பயணிகளும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.