திருப்பூர்: தாராபுரம் அருகே காரும், பெட்ரோல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு பழனியில் இருந்து தாராபுரம் வந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் – பழனி சாலை மனக்கடவு அருகே கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெட்ரோல் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியும், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது தாராபுரத்தை அடுத்த மனக்கடவு அருகே டேங்கர் லாரியும் காரும் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதில் 4-பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலாராணியை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கலாராணி சிகிச்சை பலனின்றி தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அலங்கியம் போலீசார் முதல் கட்ட விசாரணையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி (51) இவரது மனைவி சித்ரா (49) தாராபுரம் உடுமலை சாலையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (78) இவரது மனைவி செல்வராணி (70) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கலாராணி என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் திண்டுக்கல் சேர்ந்த கலாராணி (50) என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் முதல் கட்ட விசாரணையில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக பழனி சென்று விட்டு தாராபுரம் திரும்பும் பொழுது மனக்கடவு அருகே டேங்கர் லாரியும் காரும் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.
சாலை விபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய பொழுது காரும் – டேங்கர் லாரியும் மோதிய விபத்தில் 5-பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.