சேலம்: கர்நாடகா மாநிலம் பெல்லாரி பகுதியை சேர்ந்தவர் ராணாராம் (52). இவர் ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்வதற்காக, உறவினர்களான ஜோத்திதேவி (55), ஜோகிதேவி (55), சோகாராம் (50), அம்யாதேவி (42), ஜோக்கி (50) ஆகியோருடன், நேற்று காலை காரில் புறப்பட்டவர், திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றுவிட்டு ஈரோட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். காரை பெல்லாரியை சேர்ந்த டிரைவர் ஜோதாராம் (62) என்பவர் ஓட்டிச் சென்றார். சென்னை-சேலம் பைபாஸ் சாலையில் ஆத்தூரை கடந்து, வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் வந்த போது, திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி, பாலத்தின் இடதுபுற சுவற்றில் பயங்கரமாக மோதியது. இதனால் ஏர் பேக் ஓபன் ஆகி உள்ளது. இருப்பினும், இந்த விபத்தில் ராணாராம், ஜோகிதேவி, ஜோதாராம், ஜோதிதேவி ஆகியோர் உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயமடைந்தனர்.
சுவரில் கார் மோதி 4 பேர் பரிதாப பலி
0