பின்லாந்து: பின்லாந்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அந்நாட்டு வீரர் கல்லே ரோவன்பேரா சக போட்டியாளரை நூலிழையில் வீழ்த்தினார். பின்லாந்தில் ரன்னிங்கிலா நகரில் கார் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. கார்பந்தயத்தில் பின்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர்.
கரடுமுரடான பாதைகளில் சீறிப்பாய்ந்த கார்களால் புழுதி பறந்தது. மேடு பள்ளங்களில் பாய்ந்து சென்ற கார்கள் இலக்கை அடைய போட்டி போட்டு சென்றன. இதில் பின்லாந்து வீரர் கல்லே ரோவன்பேரா தனது சக போட்டியாளர் ஹல்பின் எல்ஸை விட புள்ளி 8 வினாடிகள் முன்னதாகவே இலக்கை அடைந்து வெற்றி பெற்றார்.