கோவை: காரில் மது அருந்த வருவோருக்கு ஓட்டுநர் இல்லை எனில் அதற்கு பார் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோவை காவல்துறை புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. மது அருந்தியவர்கள் அவர்கள் வீடுகளுக்குச் செல்ல மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். நம்பகத்தன்மை உள்ள வாகன ஓட்டுநரை மதுபானக் கூடம் ஏற்பாடு செய்ய வேண்டும். சொந்த வாகனத்தில் மது அருந்த வருவோர் ஓட்டுநருடன் வருவதை பார் நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும். மது அருந்திய நபரின் சொந்த வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்று வீட்டில் விட வேண்டும். மது அருந்துவோர் வேறு ஏதேனும் போதைப்பொருளை உபயோகிக்கிறார்களா என பார்க்கவேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.