பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆகஸ்ட் மாத தள்ளுபடி சலுகையை அறிவித்திருக்கின்றன. இந்த வகையில் மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்விப்ட் காருக்கு மேனுவல் வேரியண்டுக்கு ரூ.28,100 வரையிலும், ஆட்டோமேட்டிக் வேரியண்டுக்கு ரூ.33,100 வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதற்கு ரூ.15,000 மட்டுமே தள்ளுபடி வழங்கப்பட்டது.மாருதி கிராண்ட் விட்டாராவுக்கு ரூ.1.28 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச், 5 ஆண்டு நீட்டிக்கப்பட்ட வாரண்டி ஆகியவையும் இதில் அடங்கும். மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் வேரியண்ட் வாங்குவோர் ரூ.62,100 வரையிலும், சிஎன்ஜி வேரியண்டுக்கு ரூ.33,100 வரையிலும் தள்ளுபடி சலுகை பெறலாம்.
ஃபிரான்க்ஸ் ரூ.83,000 வரை, பலேனோவுக்கு ரூ.45,000 வரை , இக்னிஸ் ரூ.52,100 வரை, சியாஸ் ரூ.45,000 வரை, எக்ஸ்எல்6க்கு ரூ.35,000 வரை, ஜிம்னிக்கு ரூ.1 லட்சம் வரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி சலுகை உண்டு.இதுபோல், ,ஹூண்டாய் அல்காசர் காரின் ஃபேஸ்லிப்ட் கார் விரைவில் வெளியாக உள்ளது. இதையொட்டி, தற்போ உள்ள அல்காசர் மாடலுக்கு ஷோரூம் விலையில் ரூ.90,000 வரை தள்ளுபடி கிடைக்கும். அல்காசரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்கள் உள்ளன.
இதே நிறுவனத்தின் டுக்சான் காரின் பெட்ரோல் வேரியண்டுக்கு ரூ.25,000 வரை, டீசல் வேரியண்டுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி உண்டு. வெனு ரூ.60,000 வரை, வெர்னா ரூ.40,000 வரை, ஐ20 ரூ.50,000, கிராண்ட் ஐ10 நியாஸ் ரூ.53,000 வரை, அவ்ரா ரூ.48,000 வரை, எக்ஸ்டர் ரூ.20,000 வரை நிபந்தனைகளுக்கு உட்பட்டு தள்ளுபடி சலுகை கிடைக்கும். நிறுவனங்கள் மற்றும் டீலர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட சலுகைகள் நகரத்துக்கு நகரம் மாறுபடும். மேலும், ரொக்க தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், வாரண்டி போன்றவையும் இந்த தள்ளுபடியில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.