Monday, March 4, 2024
Home » பல்வேறு பிரச்னைகளுக்காக குரல் கொடுத்த கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறந்த போராளி: சீமான் பேட்டி

பல்வேறு பிரச்னைகளுக்காக குரல் கொடுத்த கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறந்த போராளி: சீமான் பேட்டி

by Nithya

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ரசிகர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் தங்களது இரங்கலை நேரில் சென்றும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், காணொளிகள் வாயிலாகவும் பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது;

கேப்டன் ஒரு சிறந்த போராளி: சீமான்
பல்வேறு பிரச்னைகளுக்காக குரல் கொடுத்த கேப்டன் விஜயகாந்த் ஒரு சிறந்த போராளி. ஈழப் பிரச்னை, காவிரி பிரச்னைகளுக்காக திரையுலகை திரட்டி குரல் கொடுத்தவர் விஜயகாந்த். விஜயகாந்தை போல் பின்னங்காலை வீசி Back Kick அடிப்பவர் எவருமில்லை. கலைஞர், ஜெயலலிதா ஆளுமைகளாக இருந்தபோதே கட்சி தொடங்கிய துணிச்சல்காரர். மக்களை வென்று அவர்களின் மனதில் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார் விஜயகாந்த்.

தெய்வத்திற்கு நிகரான ஆகச்சிறந்த மனிதர் விஜயகாந்த்: சீமான்
தெய்வத்திற்கு நிகரான ஆகச்சிறந்த மனிதர் விஜயகாந்த்; ஆகப்பெரும் பண்பாளர். விஜயகாந்த் பசியில் இருந்தவர்; ஆனால் அவர் எண்ணற்றவர்களின் பசியை ஆற்றியவர். கடைசி தமிழன் இருக்கும் வரை விஜயகாந்தின் நினைவும், அவரது புகழும் நிலைத்திருக்கும். திரையில்தான் கம்பீரமாக தோற்றமளிப்பார். ஆனால் மனதளவில் அவர் ஒரு குழந்தை போன்றவர். இவர் இழப்பு பேரிழப்பு” என்றார்.

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi