Wednesday, February 21, 2024
Home » கேப்டன் விஜயகாந்தின் அஞ்சலி நிகழ்ச்சி, இறுதிச் சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய உதவிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் பிரேமலதா..!!

கேப்டன் விஜயகாந்தின் அஞ்சலி நிகழ்ச்சி, இறுதிச் சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய உதவிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் பிரேமலதா..!!

by Lavanya

சென்னை: விஜயகாந்தின் அஞ்சலி நிகழ்ச்சி, இறுதிச் சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய உதவிய முதலமைச்சருக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் (டிச.28) காலை காலமானார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டு பொதுமக்கள், தொண்டர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மூலம் விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகம் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து 72 குண்டுகள் வான் நோக்கி சுடப்பட்டு, வாத்தியங்கள் முழங்க விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதிச்சடங்கில் பங்கேற்று மரியாதை செலுத்தினார். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்குக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், மாநகராட்சிக்கும், காவல்துறைக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விஜயகாந்திற்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும்.சிலை, மணிமண்டபம் அமைக்க தமிழக அரசிடம் மீண்டும் கோரிக்கை வைக்கிறோம். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இன்றுமுதலே அனுமதி வழங்கப்படும். அனைவரும் வாருங்கள்; அஞ்சலி செலுத்துங்கள். தேமுதிகவை வெற்றிபெறச் செய்து அந்த வெற்றியை விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிப்போம் என்றும் அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

13 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi